அனைவருக்கும்
வணக்கம். என் பெயர் இரா வெயினி. நான் 7ஆம் வகுப்பில் அ பிரிவில் படிக்கிறேன். நான் இப்போது... நான் விரும்பும் தலைவர்....என்ற தலைப்பில்... தந்தை பெரியாரைப் பற்றி பேச விழைகின்றேன்.
தந்தைப் பெரியார் யார்?
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும் - அவர்
மனக்குகையில் சிறுத்தை எழும்.. ….. அவர்தாம் தந்தை பெரியார் !!!....
இன்று நம் நாட்டில் நூற்று கணக்கில் கட்சிகள் உண்டு. ஆயிர கணக்கில் தலைவர்கள் உண்டு. ஆனால் பெரியார்போல் யாருமுண்டோ? ..
வாழ்நாள் முழுதும் சமூக மாற்றமே தன் கொள்கையாக கொண்டு கூட்டங்களுக்காக இவர் பயணித்த தூரம் 8,20,000 மைல்கள். ஆற்றிய சொற்பொழிவோ 21,400 மணி நேரம். இவர் தன் வாழ்நாளில் மிகவும் நேசித்தது தனது கொள்கைகளைத்தான் ... அதனால் தான் சேர்த்த சொத்துகளையும் தமிழர்களுக்க்காகவே விட்டு சென்றார்.
இவர் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் ஈரோட்டில் வேங்கட நாயகருக்கும் சின்னதாயம்மைக்கும் ராமசாமி நாயக்கராக பிறந்தார். சிறு வயதிலேயே பகுத்தறிவுடன் திகழ்ந்தார். இவர் 1885ஆம் ஆண்டு திண்ணை பள்ளியில் படித்ததோ 6 ஆண்டுகள் மட்டுமே. பின்னர் 1892-ல் தந்தையின் வியாபார மண்டியில் சேர்ந்தார்.
1907-ல் காங்கிரஸ் இயக்கத்தால் ஈர்க்க பட்டார். ஈரோட்டில் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு வராத நிலையில் துணிந்து மீட்புப் பணியாற்றினார். 1909-ல் எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு மறுமணம் செய்துவைத்தார்.
1917-இல் ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார். தேசப்பிதா காந்தியடிகளும், தமிழர் தலைவர் தந்தை பெரியாரும் காங்கிரஸில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கிய ஆண்டு 1919.
கதர் இயக்கத்தில் பெரியாரின் பங்கு
மேலை நாட்டு மோகம் கூடாது என்றார் காந்தியடிகள். அந்நியநாட்டுத் துணிகளை அணியக்கூடாது என்றும் கட்டளையிட்டார். காந்தியடிகளின் கட்டளையை ஏற்று பெரியார், கதர் உடுத்தாதவன் பதர் என்று கூறி, தமிழகம் முழுதும், கதர் துணியை தலையில் சுமந்து ஊர் ஊராக சென்று, விற்பனை செய்தார்..
மதுவிலக்குக்
கொள்கை
இன்றோ நாம் மதுவுக்கு அடிமையாக இருக்கும் காலம். குடி குடியை கெடுக்கும் என்று பிரசாரம் செய்யும் அரசாங்கமோ மதுகடையை மூட மறுக்கிறது. மூடினால் கஜானா காலியாகிவிடும் நிலை.
அன்று மதுவிலக்குக் காந்தியின் முக்கியக் கொள்கையாயிருந்த நேரம். எனவே காந்தியடிகள் ஈச்ச மரங்களையும் தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தச் சொன்னார். ஈரோட்டில் பெரியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. அதில் 500 தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. காந்தியடிகளின் கட்டளையை ஏற்று பெரியார் அவர்கள் 500 தென்னை மரங்களையும் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.
மதுவிலக்குக் கொள்கையில் பெரியார் எடுத்த மகத்தான முடிவு இது. வாழ்நாள் முழுதும் மதுவுக்கு எதிரியாக இருந்தவர் தந்தை பெரியார். தனக்கு என்றால் ஒருவழி; தம்பிக்கு என்றால் வேறு வழி என வாழ்ந்து வரும் இந்த நாட்டில் கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தார் பெரியார்.
வைக்கம் போராட்டம்
எல்லாரும்
ஓர்குலம் எல்லாரும் ஓரினம் என மதித்தவர் தந்தை பெரியார் திருவாங்கூரில் மன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வைக்கம் என்னும் ஊர் அமைந்துள்ளது. அழகான ஊர். ஆனால், தாழ்த்தப்பட்ட
மக்கள் ஊரின் முக்கிய சாலை வழியே நடந்து செல்லக்கூடாது என்று அவர்கள் தடை இருந்தது.
தெருவில் நடப்பதற்குத் தடையா? என கொதித்தார் பெரியார்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து, போராட்டம் நடத்தி, சிறை தண்டனை பெற்றார். இறுதியில் பெரியாரின் போராட்டமே வென்றது. இந்தியாவில் முதன் முதலில் வெற்றிபெற்ற போராட்டம் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ தான் என்பது வரலாற்று உண்மை. அதனை நெஞ்சுறுதியோடு நிகழ்த்திக் காண்டியவர் தந்தை பெரியார் ஆவார்.
அன்று முதல் தந்தை பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்னும் வைர வரிகளால் அழைக்கப்பட்டார்.
வகுப்புவாரி உரிமை!
இன்றைக்கு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்
கல்வி, வேலை வாய்ப்புகளிலே கிடைக்கும் இட ஒதுக்கீடு - பெரியார் உழைப்பில் கிடைத்த ஒன்றாகும். 1950- ல் தான் பெரியார் அவர்கள் செய்த பெரிய முயற்சியின் காரணமாக இந்திய அரிசியல் சட்டம் திருத்தப்பட்டது. அந்த சட்டதிருத்தம் வருவதற்கு 25 ஆண்டுக் காலத்துக்குமுன்னாலேயே ‘வகுப்புவாரி உரிமை’ கேட்டு முழக்கமிட்டவர் தந்தை பெரியார் அவர்கள் ஒருவர் தான்.
பெரியார் ஒரு நட்புக்கடல்.
அவருடன் நட்புக்கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் பெரியாரைப் பாராட்டியே வந்துள்ளனர். அப்படி அவரிடம் நட்புக்கொண்டவர்களில் பார்ப்பனர்களும் உண்டு. குறிப்பாக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பெரியாருடன் நெருங்கிய நட்புக்கொண்டு பழகி வந்தார். அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கலக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியார். பிறர் மனம் தனிப்பட்ட முறையில் புண்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பெரியார் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவரால் ராஜாஜி அவர்களுடன் இறுதிக் காலம்வரை நட்புடன் உறவாட முடிந்தது.
பெரியார் நட்புக்கடல் மட்டுமல்ல. பண்பாட்டுக் காவலரும் ஆவார்.
தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் பெரியாரின் பாசத்திற்குரிய நண்பர்களில் ஒருவராக இருந்தார். திரு.வி.க. அவர்கள் ஒருமுறை பெரியாரின் இல்லத்தில் விருந்தினராக தங்கினார். இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தார்கள். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து காலைக் கடன்களை முடித்தார்; குளித்தார்; உடை மாற்றினார்.
அந்த நேரம் –
பெரியார் அவர்கள் திரு.வி.க. முன்பு திருநீற்றுச் சம்படத்தை நீட்டினார். திரு.வி.க வியந்து போனார். “நீங்கள் கடவுளை நம்பாதவர். உங்கள் வீட்டில் திருநீறு எப்படி வந்தது?” என்று திரு வி க திகைப்புடன் கேட்டார். “நான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் தாங்கள் கடவுள் நம்பிக்கைகொண்டவர். எனது விருந்தினர். விருந்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவது தான் நல்லது” என்று பெரியார் விளக்கம் அளித்தார். திருநீறு பூசிய தமிழ்த்தென்றல் திரு.வி.க., புரட்சிப்புயல் பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்.
தலைவர்களுக்கு எல்லாம்
உதாரணமாய் வாழந்தவர்
தந்தை பெரியார்:
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என யுனஸ்கோ-வால் பாராட்ட பெற்றவர் தந்தைபெரியார். பெரியார் ஒரு சிந்தனைச் சுரங்கம். சீர்திருத்தச் செம்மல். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, எழுத்துச் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என, இப்படிப் பயனுள்ள சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். 24-12-1973 அன்று அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவரின் கொள்கைகளை நமக்காகவே விட்டு சென்றுள்ளார். நன்றிகாட்டத் தெரியாத இந்தச் சமுதாயத்துக்காக்க்கடைசி மூச்சுவரை 95 ஆண்டுகள் பாடுபட்ட தலைவர் உலக வரலாற்றில் தந்தைப்பெரியார் ஒருவரேதான்.
குடிசெய்வார்க்கு
இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”
மானம் கருதக் கெடும்”
என்ற குறள் படி வாழ்ந்து காட்டியவர் நான் விரும்பும் தலைவர்! அவரே நான் விரும்பும் நல்ல தலைவர் என்று கூறி அமர்கிறேன்
நன்றி
வணக்கம்…
Big and nice
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete