வளரிளம் பருவம் வாழ்வின் “ஆடி”- நல்
“பழக்க விதைகளை” விதைக்கணும் தேடி –இங்கே
களர்நிலம் போன்ற
மானிடர் கோடி – எவரும்
கடமை மீறினால் சேரும்
காரிருள் நாடி!!!
இலக்கணமின்றி இலக்கி யமுண்டோ?
இலட்சியமின்றி வாழ்வு
தானுண்டோ?
சிலகணமாயினும்
சிந்தித்தே –நாம்
வகுக்கணும் நமது வாழ்வு தனையே!!
வெல்லமா யிருப்பினும் வீதியில் உண்கிலேன் – என்
கொல்லைப் புறத்திலும் குப்பையை சேர்க்கிலேன்.
கொல்லும் வியாதிதரும் கொசுவையும் ஒழிக்க – நான்
ஒல்லும் வகையெலாமென் சூழலை மாற்றுவேன்
உள்ளத் தூய்மையுடன் உடலையும் பேணுவேன்
இன்சொலும் நன்செயலும் மீறினால் நாணுவேன்
நல்ல மனிதரின் நட்பையே நாடுவேன்
நானிலம் போற்றிட நானிங்கே வாழுவேன்!!!
No comments:
Post a Comment