Saturday, 8 February 2014

திருவள்ளுவர் - இரா.யாழினி


திருவள்ளுவர் - யாழினி

முன்னுரை: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுஎன்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்திருக்குறள்என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாகஉலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்.

திருவள்ளுவர்:  பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

கடைச் சங்க காலமான கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

 திருக்குறள் இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் இயற்றியதாக கூறுவர். அவை ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம் ஆயினும் பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலர் இயற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்த  திருவள்ளுவர்.  திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். (சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)

திருக்குறளின் சிறப்பு:  திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாகஉலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.

ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இதுஈரடி நூல்என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  • அறத்துப்பால்முதல் பிரிவானஅறத்துப்பாலில்மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

  • பொருட்பால்இரண்டாவது பிரிவானபொருட்பாலில்உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

  • இன்பத்துப்பால்மூன்றாவது பிரிவானஇன்பத்துப்பால்அல்லதுகாமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.

திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் விளக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் - நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், என்றும் அழைக்கப்படுவார்.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.  திரு பரிமேலழகர், திரு மு.வரததாசனார், திரு மணக்குடவர், திரு மு.கருணாநிதி, திரு சாலமன் பாப்பையா ஆகியோர் அவர்களில் குறிப்பிட தகுந்தவர்கள் ஆவார்கள்.

திருவள்ளுவரும் சைவமும்

திருநீறு அணிந்த சைவராக சித்தரிக்கும் திருவள்ளுவநாயனார் ஓவியம். திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.

திருவள்ளுவ மாலை திருக்குறளின் சிறப்பை கூறும் அழகிய பாடல்கள் ஆகும். தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

முடிவுரை:

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்.”-  என்ற வள்ளுவரின் குரலால் இன்றும் வள்ளுவர் நம்மோடு வாழ்ந்து வருகின்றார் என்றால் அது மிகை இல்லை. லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள "ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்" என்னும் கல்வி நிறுவனத்தில், வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. வள்ளுவரின் குறள் உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பது அதன் முக்கியம் உணர்த்தும் உண்மை.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”-

என்ற நமது பூர்வீக புகழுக்கு காரணம் நமது திருவள்ளுவர். திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

 

8 comments: