Tuesday, 26 February 2013

“அறிவியல் ஆராய்ச்சியில் புதுமை புனைந்த பெண்கள்”


அனைவருக்கும் வணக்கம்... நான் இரா வெயினி ஜவஹர் மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன்... இங்கே "அறிவியல் வளர்ச்சியில் அறிய பங்காற்றிய பெண்மணிகளை" பற்றிச் சிறிய உரை நிகழ்த்த வந்துள்ளேன்..நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் அனுபவிக்கும் பலவித சௌகரியங்கள் 18-ம் நூற்றாண்டு வரை மக்கள் கனவிலும் கண்டிராத அதிசியங்கள்தான்.. இவை அனைத்தும் தொழில் புரட்சியின் விளைவால் கல்வியின் மேம்பாடுகளால்  நமக்கு கிடைத்த பழங்கள்.. இதற்காக அல்லும் பகலும் உழைத்த அறிஞர்கள் ஏராளம்... இவர்களில் ஆண்களை தவிர்த்து பல அதிசிய பெண்களும் நமக்கு அறிவியல் தொண்டு புரிந்துள்ளார்கள் என்பதை ஏனோ பலர் அறிவதில்லை.. அவர்களை குறித்து இங்கே என் உரை விரிகிறது..

நமது நாடுகளை போலவே மேற்கத்திய நாடுகளிலும் பெண் கல்வி என்பது 18-ம் நூற்றாண்டு வரை வாய்ப்பு மிகவும் குறைந்தே இருந்துள்ளது... காரணம் ஆணாதிக்கம் படைத்த மத வாதிகள்தான்  

என்ன காரணத்தாலோ எல்லா மதங்களும், பெண்களை கல்வி பயில தடை போட்டு, அடுப்படியில் அடைந்து கிடக்கும் ஒரு விலங்காகவே பாவித்துள்ளததை சரித்திரம் படித்த அனைவரும் அறிவர்.. இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலும் பெண் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்த அறிய வாய்ப்பாக அமைந்திருந்தது..

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?"

என்ற வாக்கின் மூலம் பெண் கல்வி சமூகத்தில் முன் காலத்தில் சிறப்பாக இருக்க வில்லை என்பதை அறிய முடியும்.. ஆனால் அதையும் மீறி சில சிந்தனை பெண்கள் உலகில் தங்கள் அறிவியல் எண்ணங்களை பதிவு செய்து விட்டே சென்றுள்ளார்கள்

கம்பருக்கும் இணையாக கவிதை மழை பொழிந்த ஓவையாரின் வரிகள் தான் இன்று நாஸா ஆராய்ச்சிக் கூடத்தில் நம்மை முதலில் வரவேற்கிறது.. இதை நீங்கள் இணையத்திலும் பார்க்கலாம்.. அது தான் ..

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.. என்ற மாபெரும் வரிகள்..

இதுதான் அனைத்து ஆராய்ச்சிக்கும் அடிப்படை நோக்கம்.. ஆக பெண்கள்தான் முதலில் ஆராச்சியின் விதையை கேள்வியில் தொடுத்தவர்கள் ....ஆண்கள் அவர்களை தொண தொணன்னு பேசாத என்று தடுத்து வந்தார்கள்..

கல்வியின் கதவு முதலில் மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கும் திற்நத போது... அதை வெகுவாக பயன்படுத்திய பெண்கள் அறிவியல் ஆராச்சியில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சரி நிகராக பரிணாம வளர்ச்சி பெற்று... பணி புரிந்துள்ளார்கள். அவர்களின் எண்ணிக்கையையும் பெயரையும் இங்கே விரித்து கூற எனது நேரம் குறைவாக உள்ளதால்... சுருக்கமாகவே சொல்லி முடிக்க உள்ளேன்..

ரேடியத்தை பிரித்தெடுத்த மேரி குயிரியை அனைவரும் அறிவர்.. ஆனால் மனித சீரழிவாம் HIV  பற்றி ஆராய்ந்து அறிந்த, அதனால் 1998 ம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற, Françoise Barré-Sinoussi அவர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ரிபோசொம்களை பற்றி ஆராய்ந்து 2009-ல் நோப்லே பரிசு வென்றவர் இஸ்ரேலை சேர்ந்த Ada Yonath.ஆவர்.  வைரசை ஆராய்ந்த Anne McLaren, குரோமொசொம்களை ஆராய்ந்த Elizabeth Blackburn போன்றவர்கள் மிகவும் குறிபிடதகுந்த பெண் அறிஞர் கள் ஆவார்கள். இதுபோல் அறிவியியல் ஆராய்ச்சியில் ஆண்களுக்கு நிகராக பங்களித்த அனைவரின் பெயரையும் இங்கே கூற நேரம் இருக்காது..

எனவே சுருங்க சில தகவல்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்உலக அளவில் 2001ஆண்டு வரை, நோபெல் பரிசு பெற்றவர்களில் வெறும் 10 சதம் தான் பெண்கள் ஆவார்கள். ஆனால் 21-ம் நூற்றாண்டிலிருந்து நோபெல் பரிசு பெரும் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. உதாரணத்திற்கு 2009-ம் ஆண்டில் மட்டும் 3 பெண்கள் நோபெல் பரிசை ஆண்களிடமிருந்து தட்டி சென்றுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் "எலிசபெத்" அவர்கள் உயிரியியல் மூலக்கூறுகளை ஆராய்ந்ததற்கும் , இஸ்ரேலில் பிறந்த "ஆட யோனைத் " அவர்களுக்கு வேதியியலுக்காகவும், நோபெல் பரிசு பெற்றனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நோபெல் பரிசு வென்ற பெண்களின் எண்ணிக்கை 16 உயர்ந்துள்ளது.  நோபெல் பரிசு வென்றால் தான் விஞ்ஞானியா? இல்லை இல்லை பரிசுக்கு தகுதியான எண்ணில் அடங்கா பெண்கள் ஏராளம்.. இந்தியாவிலும் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் சமிப காலங்களில் நம்பிக்கை நட்சத்திரங்களாக பல்வேறு துறையில் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். எடுத்து காட்டாக தமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்து இன்று வானில் செயற்கை கோள் விட்டு இஸ்ரோவால் புகழ் பெற்றுள்ளார் ஒரு பெண்மணி... அவர்தான் நம் மரியாதைக்குரிய வளர்மதி அவர்கள்...

கொல்கா\ட்டவை சேர்ந்த Dr கங்கா அவர்கள் புற்று நோய் ஆராய்ச்சியில் பெரிதும் வெற்றி கண்டவர்... அதேபோல் கணினி விஞ்ஞானியான சங்கமித்ரா அவர்கள் மூலக்கூறு மற்றும் புற்று நோய் அரிசியில் வெற்றி கண்டதற்காக இந்தியாவின் புகழ் பெற்ற சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதை பெற்ற முக்கிய பெண்களாவர்... இவர்களை போல இதுவரை மொத்தம் 14 பெண்மணிகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள் இதுபோல் எராளமான பெண்மணிகள் விஞ்ஞான வானில் மின்னும் வைரங்களாக உள்ளார்கள்முன்னேறிய நாடுகளின் ராணியான இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று... அங்குள்ள பல்கலை கழகங்களில் ஆண்டுதோறும் வெளியேறும் ஆராய்ச்சி மாணவர்களில் 50 விழுக்காடு பெண்கள்தான் என்று முடிவு தருகிறது... இதுபோல நமது பள்ளி கல்வி தொட்டு வரும் தேர்வு முடிவுகளும் பெண்கள் முன்னேறி வருவதை பறை சாத்தும்.... 

இப்படி

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்

இளைப்பில்லை தானென்று

கும்மி அடி.. பெண்ணே, கும்மி அடி!!!.. " என்ற பாரதியின் கனவு மெல்ல நனவாகி வருகிறது.

நன்றி  

வணக்கம்